பொறியியல் மாணவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வு: வழிமுறைகள் வெளியீடு.

ஞாயிறு, 24 ஜனவரி 2021 (15:23 IST)
பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் சமீபத்தில் அறிவித்த நிலையில் தற்போது அந்த தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதன்படி அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு: மாணவர்கள் ஆன்லைன் தேர்வில் கட்டாயம் பங்கேற்க வேண்டும், தேர்வு ஒரு மணி நேரம் நடைபெறும் 
 
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆன்லைன் தேர்வில் பங்கேற்க இயலாமல் போனால் நேரடி எழுத்துத்தேர்வு நடத்தப்படும். லேப்டாப் ஸ்மார்ட்போன் டேப்லட் கணினி யில் தேர்வு எழுதலாம் வீவா தேர்வும் ஆன்லைனிலேயே நடத்தப்படும்
 
60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு பின்னர் 100 மதிப்பெண்களுக்கு மாற்றப்படும். ஆன்லைன் தேர்வு எழுதும் போது மாணவர்கள் தன்னுடன் வேறு யாரையும் அமர வைக்க கூடாது
 
மேற்கண்ட நெறிமுறைகளை மாணவர்கள் அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்