சுவாதி கொலை ; திணறும் காவல்துறை ; நீடிக்கும் மர்மம்

Webdunia
புதன், 29 ஜூன் 2016 (14:01 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில், கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சுவாதி வழக்கில் குற்றவாளியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
காலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மர்ம நபர் ஒருவர் அரிவாளால் வெட்டி சுவாதியை கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டான். இந்த சம்பவம் சென்னை மட்டுமின்றி தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த வழக்கை முதலில் ரயில்வே போலீசார் விசாரித்து வந்தனர். அதன் பின் சென்னை காவல்துறைக்கு மாற்றப்பட்டது. நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த விசாரனையை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த 6 நாட்களாக பல்வேரு கோணங்களில், அதிரடியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 
போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனின் நேரடி மேற்பார்வையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வருகிறார்கள். கொலை செய்தவன் பயன்படுத்திய அரிவாளில் இருக்கும் கைரேகையும், அவன் தப்பி ஓடும் வீடியோவும்தான் ஆதராமாக போலீசாரிடம் உள்ளது. அந்த கை ரேகை, எந்த பழைய குற்றவாளிகளுடனும் ஒத்துப்போகவில்லை. அந்த வீடியோவில் இருக்கும் நபர்தான் கொலையாளியாக இருக்கலாம் என்று நம்பப்பட்டது. 
 
ஆனால், கொலை நடந்த இடத்தின் அருகில் இருந்த கேண்டின் உரிமையாளர் அளித்த தகவல் படி அவன்தான் கொலையாளி என்பது தற்போது உறுதியாகி உள்ளது. இதனால் போலீசார் விசாரனையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குற்றவாளியை நெருங்கி விட்டோம். விரைவில் அவனை கைது செய்துவிடுவோம் என்று போலீசார் தரப்பு தெரிவித்துள்ளது. இதில், சுவாதியின் பெற்றோர்கள், நண்பர்கள், நெருங்கிய தோழிகள் என எல்லோரிடமும் விசாரனை நடைபெற்று வருகிறது. 
 
இருப்பினும் குற்றவாளியை பிடிப்பதில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியே  கசிந்திருக்கிறது.   பேஸ்புக்கில் சுவாதியை உரையாடிய இரண்டு வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். 
 
சுவாதியை யாரோ ஒரு வாலிபர் சில மாதங்களாக பின் தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது பற்றி சுவாதி தோழிகளிடமோ, பெற்றோரிடமோ கூறியிருக்கிறாரா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 
இதில், போலீசாருக்கு சில தகவல்கள் கிடைத்திருந்தாலும், குற்றவாளியை நெருங்குவதில் மர்மம் நீடிப்பதாக தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்