அணில் மட்டுமல்ல, காக்கா புறாவும் தான் காரணம்: மின் தடை குறித்து எஸ்வி சேகர்

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (22:27 IST)
சமீபத்தில் மின்தடை கொடுத்து பேட்டி அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் மின்தடைக்கு அணில் ஒரு காரணம் என்று கூறியிருந்தார். அணில்கள் மின் வயர்கள் மீது ஏறுவதால் ஷார்ட் ஆகி மின்தடை ஏற்படுவதாக தெரிவித்து இருந்தார் 
 
அவர் கூறியதன் இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகி கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது பல மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியது குறித்து எஸ்வி சேகர் தனது டுவிட்டரில் கிண்டலுடன் கூறியதாவது

அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்னது தவறில்லை. ஆனால் அணில்களால் மட்டும் மின் தடை வராது. புறா,காக்கா போற்ற பறவைகள் டிராஸ்பார்மர் பியூஸ் கம்பியில் அமரும் போது ஷார்ட் ஆகி மின் தடை ஏற்படும். அது அங்கேயே இறந்து விட்டால் மின் வாரிய ஊழியர்தான் வந்து சரி செய்ய முடியும்.கடந்த10 ஆண்டுகளில் எங்கள் மயிலாப்பூர் ஏரியாவில் பல தடவை மின் தடை ஏற்பட்டுள்ளது. ஆனால் உடனே சரி செய்யப்பட்டுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்