#அணில்தான்_காரணம்... நக்கலுக்கு உள்ளான செந்தில் பாலாஜியின் பேச்சு!!

புதன், 23 ஜூன் 2021 (10:21 IST)
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #அணில்தான்_காரணம் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 

 
தமிழகத்தின் பல மாவட்டங்களில் தினம்தோறும் சில மணி நேரங்கள் மின்தடை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் மின்தடை குறித்து சமீபத்தில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த சில மாதங்களாக மின்வாரிய பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால், தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மின்கம்பிகளில் கொடிகள் படர்ந்துள்ளதாலும், அணில்கள் ஓடுவதாலும் மின்தடை ஏற்படுகிறது என கூறியிருந்தார்.
 
இந்நிலையில், இதனை கிண்டல் செய்யும் விதமாக சமூக வலைத்தளமான டிவிட்டரில் #அணில்தான்_காரணம் என்ற ஹேஷ்டேக்கும் #அணில்பாலாஜி என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்