உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் நாளை காலை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.
3 வருடங்களுக்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. இதனிடையே மறுவரையறை பணிகள் முடிவடையாத வரை உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என திமுகவழக்கு தொடுத்தது.
இந்த வழக்கு குறித்து விசாரித்த உயர்நீதிமன்றம், “தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் மறுவரையறை பணிகள் நிறைவடையாத நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் குழப்பம் வராதா?” மாநில தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியது.
இதனை தொடர்ந்து இதற்கு பதிலளித்த மாநில தேர்தல் ஆணையம், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது. இனி 2021-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய பிறகே மறுவரையறை செய்யப்படும் கூறியது
இதனை அடுத்து வார்டு மறுவரையறை பணிகள் முடிவடையாத புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் தேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியுமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு மாநில தேர்தல் ஆணையம் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க தயார் என பதிலளித்தது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் நாளை காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்க உள்ளது.