காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட உத்தரவு

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2016 (19:38 IST)
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து டிசம்பர் 15ஆம் தேதி வரை 2000 கன அடி தண்ணீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

 
காவிரி நடுவர்மன்றம் அமைப்பது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், டிசம்பர் 15ஆம் தேதி வரை காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
 
இந்த வழக்கு குறித்து நீதிபதிகள் கூறியதாவது:-
 
காவிரி நடுவர்மன்ற முடிவை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. காவிரி தொடர்பான வழக்குகள் டிசம்பர் 15ம் தேதி பிற்பகலில் விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
அடுத்த கட்டுரையில்