கேரளாவில் உள்ள பத்தினம் திட்டா என்ற மாவட்டத்தில், 18 வயது தடகள வீராங்கனை ஐந்து ஆண்டுகளாக 62 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், தற்போது வரை அதில் 52 பேர்களை கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
13 வயதிலிருந்து 18 வயது வரை, 5 ஆண்டுகள் தனது காதலன், காதலனின் நண்பர்கள், ஆட்டோக்காரர்கள், மீன் வியாபாரிகள் என பலரும் தடகள வீராங்கனையை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
வீராங்கனையின் காதலன் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் வரை 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 8 பேர் கைது செய்யப்பட்டு, மொத்தமாக 52 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.