தங்கம் விலை இன்றைய ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளது தங்க நகை பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 50 ரூபாய், ஒரு சவரன் 400 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. இன்னும் விலை அதிகரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இது சரியான நேரமாக இருக்கலாம் என்று தங்க நகை ஆலோசகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 50 ரூபாய் உயர்ந்து 7,390 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 400 ரூபாய் உயர்ந்து விலை ரூபாய் 59,120 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,056 எனவும் ஒரு சவரன் ரூபாய் 644048 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 103.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 103,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
Edited by Siva