இந்த பனிமூட்டம் காரணமாக விமானங்கள் மற்றும் ரயில் சேவைகள் தாமதம் ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் 100 விமானங்கள் மற்றும் 26 ரயில்களின் சேவை மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை 29 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாகவும், அதேபோல் விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வழியாக உள்ளன.
இந்த நிலையில் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல் கூறிய டெல்லி வானிலை அதிகாரிகள், வாகன ஓட்டிகள் அதிகாலை நேரத்தில் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படியே கவனமாக வாகனத்தை இயக்க வேண்டும் என்றும், பயணிகள் எந்தெந்த விமானங்கள் தாமதமாக செல்கின்றன, எந்தெந்த ரயில் சேவை மாற்றப்பட்டுள்ளது என்பதை அந்தந்த நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு தங்கள் பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.