என்ன செய்தாவது ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்! – உச்சநீதிமன்றம் உத்தரவு!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (12:22 IST)
சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ளது ஆர்.ஏ.புரம். இந்த பகுதியில் ஏராளமான எளிய மக்கள் வசித்து வந்த நிலையில் அப்பகுதியில் வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் முதலாக ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஆர்.ஏ.புரம் பகுதி ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற கடந்த 2011ம் ஆண்டிலேயே உத்தரவிட்ட நிலையில் இத்தனை காலமாக அகற்றாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் “முதல்வர் சட்டமன்றத்தில் பேசியதில் இருந்து ஆர்.ஏ.புரம் விவகாரத்தில் அவர் விழிப்புணர்வுடன் இருக்கிறார் என தெரிகிறது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு அளித்த காலக்கெடு முடிந்துவிட்டது. தேவையான காவலர்களை வரவழைத்து, மாவட்ட ஆட்சியரை வைத்து பேச்சுவார்த்தை நடத்தி, என்ன செய்தாவது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்