முதல்வராய் ஓராண்டு... கருணாநிதி நினைவிடத்தில் மலர் அலங்காரம்!

சனி, 7 மே 2022 (10:23 IST)
ஓராண்டு நிறைவு கொண்டாட்டமாக தலைமை செயலகம், சட்டப்பேரவை வளாகம், அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடம் ஆகியவை அலங்கரிக்கப்பட்டுள்ளன. 

 
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றது. பத்தாண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சியைப் பிடித்தது. திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. 2021 மே 7 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். 
 
ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. திமுக கட்சியும் தனது ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. ஓராண்டு நிறைவு கொண்டாட்டமாக, தலைமை செயலகம், சட்டப்பேரவை வளாகம், அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடம் ஆகியவை அலங்கரிக்கப்பட்டுள்ளன. கழகத்தினர் கொண்டாட்டத்தில் உள்ளனர். 
 
அதிலும் கருணாநிதி நினைவிடத்தில் தலைமை செயலகம் போன்ற மாதிரி வடிவமைக்கப்பட்டு மலர்களில் முதல்வராய் ஓராண்டு முதன்மையாய் நூறாண்டு காப்போம் என எழுதப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்