தமிழக அரசு சமீபத்தில் மின் கட்டணத்தை உயர்த்திய நிலையில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
மின் கட்டண உயர்வுவுக்கு மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்த போது மின் கட்டண உயர்வுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மறுத்து விட்டனர். மேலும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட துறை அதிகாரியை நியமிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட அறிவுறுத்தி உள்ளது
ஒருவேளை தமிழக அரசு சட்டத் துறை அதிகாரியை 3 மாதத்தில் நியமிக்க வில்லை என்றால் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை நாடலாம் என மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்