கோடநாடு வீடியோ விவகாரம்: ஆரம்பத்திலே ஆஃப் பண்ண உச்சநீதிமன்றம்

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2019 (11:34 IST)
கோடநாடு வீடியோ விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமென தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
 
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக மேத்யூஸ் என்ற பத்திரிகையாளர் வெளியிட்ட வீடியோ தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வீடியோ ஒரு திட்டமிட்ட சதி என்றும், இந்த வீடியோ வெளியிட்டவர் மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்
இதற்கிடையே கோடநாடு வீடியோ விவகார வழக்கின் விசாரணையில் நம்பகத்தன்மை இல்லாததால், இவ்வழக்கை சிபிஐ விசாரணை செய்யவேண்டும் என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கோடநாடு வீடியோ விவகாரத்தில் சிபிஐ விசாரிப்பதற்காக தொடரப்பட்ட வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்