தமிழக முதல்வராக இருந்த ஓபிஎஸ் சசிகலாவின் நிர்பந்தத்தால் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து சசிகலா அண்ட் கோ புதிய முதல்வராக எடப்பாடிப் பழனிச்சாமியைத் தேர்ந்தெடுத்த போது அவருக்கு எதிராக ஓ.பி.எஸ்.,மா.பா. பாண்டியராஜன் ஆகியோர் வாக்களித்தனர்.
ஆனால் காலங்கள் மாற எடப்பாடி முதல்வரானதும் சசிகலா குடுமபத்தைக் கழட்டி விட்டு ஓ.பி.எஸ்- ஐ சேர்த்துக் கொண்டார். அதன் பின்னர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக ஆளுநரிடம் மனு அளித்த 18 எம்.எல்.ஏ. க்களின் பதவியை அதிமுக கொறடா பறித்தார். அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும் பதவிநீக்கம் செல்லும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னர் தொடுக்கப்பட்ட வழக்கு இன்னும் விசாரணையில் இருக்கிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷன், அப்துல் நசீர் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமரவு முன் நடந்து வரும் இந்த வழக்கின் விசாரணை நாளை நடக்க இருக்கிறது. இந்த வழக்கில் பன்னீர் செல்வம் அண்ட் கோ தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, சி.எஸ். வைத்தியநாதன், குரு கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆஜர் ஆகியுள்ளனர். திமுக கொறடா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார்.