நிரூபர்களுக்கு மட்டும் பாதுகாப்பு கவசம் கொடுத்த சன் டிவி! கிளம்பிய சர்ச்சை!

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (13:44 IST)
சென்னையில் செய்தி சேகரிக்க செல்லும் தங்கள் நிரூபர்களுக்கு மட்டும் சன் டிவி பாதுகாப்பு கவச உடைக் கொடுத்துள்ளது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1596 ஆக உள்ளது. தமிழகத்திலேயே அதிக பாதிப்பு உள்ள பகுதியாக சென்னை உள்ளது.  அங்கு கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிகமாகிவரும் நிலையில் மருத்துவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் எனப் பணியில் இருப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் ஒரே செய்தித் தொலைக்காட்சியைச் சேர்ந்த 26 பேர் உள்பட மொத்தம் 29 பேருக்குக் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இன்றும் 20 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தி சேகரிக்க செல்லும் தங்கள் நிரூபர்களுக்கு மட்டும் சன் டிவி பாதுகாப்பு உடைகளை வழங்கியுள்ளது.

நிரூபர்களின் கூட செல்லும் ஒளிப்பதிவாளர்களுக்கு எந்த உடையும் வழங்கப்படாதது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி கண்டனங்களைப் பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்