ரஜினியை மிரட்டும் சுப்பிரமணியன் சுவாமி!

Webdunia
புதன், 5 ஜூலை 2017 (12:02 IST)
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து தனது அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்ததில் இருந்து அவரது அரசியல் வருகை எப்பொழுது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


 
 
ரஜினியின் அரசியல் வருகையை பலர் வரவேற்றாலும் சிலர் கடுமையாக எதிர்க்கின்றனர். அந்த வரிசையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ரஜினியை அரசியல் பிரவேசத்தையும் அவரையும் தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
 
ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது, அவர் ஒரு கோழை, அவருக்கு அரசியல் பற்றி ஒன்றும் தெரியாது, அவர் மக்களை ஏமாற்றி வருகிறார், ரஜினி தமிழரே கிடையாது, ரஜினி படிக்காதவர், அவன் என ஒருமையில் பேசியது என சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து ரஜினியை விமர்சித்து வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது ரஜினியை மிரட்டும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவருக்கு தான் ஆபத்து என தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்