பிரதமர் மோடியை சீனாவுக்கு தூதராக நியமிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி கிண்டல்..!

Mahendran
புதன், 3 ஏப்ரல் 2024 (10:17 IST)
பிரதமர் மோடி குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து வரும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தற்போது அவரை சீனாவின் தூதராக நியமிக்க வேண்டும் என்று கிண்டலுடன் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியாவின் நிலப்பகுதிகளை சீனா ஆக்கிரமித்து வருவதாகவும் அதற்கு பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் திமுக உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம் தாண்டி வரும் நிலையில் தற்போது பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
 
 பிரதமர் மோடியை சீனாவுக்கு தூதராக நியமிக்க வேண்டும் என்றும் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இருந்து லடாக் வரை இந்திய பகுதிகளை சீனா தட்டிப் பறித்து வருகிறது என்றும் சீனா ஆக்கிரமித்ததாக கூறப்படும் இடத்திற்கு யாரும் வரவில்லை நாங்களும் போக மாட்டோம் என மோடி கூடி வருகிறார் என்றும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் 
 
இதுவரை எதிர்க்கட்சிகள் மட்டுமே விமர்சனம் செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது பாஜகவில் உள்ள மூத்த தலைவர் ஒருவரே பிரதமர் மோடியை சீன விகாரத்தில் விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்