மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் 100 ஹெக்டேர் பரப்பளவில் கணிசமான அளவு தங்க இருப்புகள், தாமிரம் மற்றும் பிற கனிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு இந்தியாவுக்கான ஜாக்பாட் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆரம்பக்கட்ட ஆய்வுகளின்படி, தங்க இருப்புகள் சுமார் 100 ஹெக்டேர் பரப்பளவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதன் மூலம், தங்கத்தின் அளவு பல லட்சம் டன்கள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.
சமீபத்திய ஆண்டுகளில் மத்திய இந்தியாவில் நடந்த மிக முக்கியமான கனிமக் கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்றாகும். தங்க படிவுகளை வெட்டி எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை தீர்மானிக்க, அடுத்த கட்டமாக விரிவான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.