இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி. சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தனது ஊழியர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு ஊதிய திருத்தம் அறிவித்துள்ளது. சி3ஏ மற்றும் அதற்கு சமமான பதவிகளில் உள்ள தகுதியுடைய அனைத்து ஊழியர்களுக்கும் அதாவது கிட்டத்தட்ட 80% பணியாளர்களுக்கு செப்டம்பர் 1, 2025 முதல் ஊதிய உயர்வு அமலுக்கு வரும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
"டி.சி.எஸ்-இன் எதிர்காலத்தை நாம் அனைவரும் இணைந்து உருவாக்கும் இந்த வேளையில், உங்கள் ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்," என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளவில் 6 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்ட டி.சி.எஸ்., தனது பணியாளர்களை வெவ்வேறு கிரேடுகளாக பிரித்துள்ளது. சி3ஏ கிரேடு வரையிலான பதவிகள் பொதுவாக, நிறுவனத்தின் செயல்பாடுகளின் முதுகெலும்பாக கருதப்படுகிறது.
டி.சி.எஸ். நிறுவனம் சமீபத்தில் உலகளவில் தனது 12,000 ஊழியர்களை ) பணிநீக்கம் செய்யப் போவதாக அறிவித்திருந்த நிலையில் அதன் பங்குகள் இறங்கின. தற்போது ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு அதன் ஊழியர்களுக்கு உண்மையில் இன்ப அதிர்ச்சி தான்..