சனாதனத்தை பற்றி பேசினால் தமிழ்நாடு அரசை டிஸ்மிஸ் செய்யும் வேலையில் இறங்குவேன்: சுப்பிரமணியன் சுவாமி

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (17:48 IST)
இன்னொரு முறை சனாதனம் குறித்து உதயநிதி பேசினால் தமிழ்நாடு அரசை டிஸ்மிஸ் செய்யும் வேலையில் இறங்குவேன் என  சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் சனாதனம் குறித்து பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. அவரது பேச்சுக்கு இண்டியா கூட்டணியின் சில தலைவர்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
 இந்த நிலையில் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சுப்ரமணியன் சாமி இன்னொரு முறை சனாதன தர்மத்தை நிராகரிக்கும் வகையில் உதயநிதி ஏதாவது பேசினால் தமிழ்நாடு அரசை ஆட்சியை டிஸ்மிஸ் செய்யும் வேலைகள் இறங்குவேன் என்று தெரிவித்துள்ளார். 
 
மேலும் ஸ்டாலினை மகனை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்