24 மணி நேரத்தில் புயல்: சென்னைக்கு ஆபத்தா?

Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2018 (17:13 IST)
டிசம்பர் மாதம் தனது வேலையை காட்ட துவங்கியுள்ளது. ஆம், காற்றழுத்த தாழ்வு பகுதி, தீவிரம் அடைந்து காற்றழுத்தமாகி, அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாற உள்ளது. 
 
அதாவது, வங்க கடலில் உருவாகி உள்ள புயல் சின்னத்தால், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக பலமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் இந்திய கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
 
இதன் பிறகு இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஆந்திரா, வடக்கு தமிழகம் நோக்கி நகர வாய்ப்புள்ளது. இதனால் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழை முதல் அதிக கனமழை பெய்யக்கூடும். 
 
புயல் தமிழக தென்கிழக்கு வங்கக்கடல் - மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும். இந்த புயல் கரையை கடக்கும் போது 100 முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இன்னொரு வலுவான புயல் தாக்கவுள்ளதால் தமிழகத்தின் பல பகுதிகளிலும், சென்னையிலும் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்