உள்துறை அமைச்சரை சந்தித்த அதிமுக எம்.பி.கள்

புதன், 12 டிசம்பர் 2018 (12:58 IST)
அதிமுகவின் எம்.பி.கள் அனைவரும் இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மாதம் வீசிய கஜா புயலால் டெலடா மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. புயல் வீசி ஒரு மாத காலம் ஆன போதிலும் இன்னும் மக்கள் அதில் இருந்து மீளவில்லை. தங்கள் வாழ்வாதாரம், விவசாய நிலங்கள், கால்நடைகள் அனைத்தையும் இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.

தமிழக அரசு புயல் சேதம் 15000 கோடி ரூபாய் எனக் கணக்கிட்டு மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து புயல் நிவாரணம் கேட்டுள்ளது. ஆனால் மத்திய அரசோ இதுவரை மொத்தமாக 600 கோடி ரூபாய் மட்டுமே நிவாரணமாக ஒதுக்கியுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான நிவாரணங்களை அளிக்க முடியவில்லை. இதனால் மக்கள் மத்திய, மாநில அரசுகளின் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். அதிமுக வின் வசம் மொத்தமாக 39 எம்.பி.கள் உள்ளன. நாடாளுமன்றத்தில்  மூன்றாவது பெரியக் கட்சியாக அதிமுக இருக்கிறது. எனவே தனது அமைச்சர்கள் மூலம் அழுத்தம் கொடுத்து போதிய நிதியைப் பெற வேண்டுமென அரசியல் வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.

இதனால் அதிமுக எம்.பி.கள் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து கஜா புயலுக்கான நிவாரண நிதிஅயி உடனடியாக வழங்கவேண்டுமெனக் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்