பல வியத்தகு சாதனை அறிவிப்புகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருங்கள்!’’ -முதல்வர் மு.க.ஸ்டாலின்

Sinoj
சனி, 6 ஜனவரி 2024 (18:55 IST)
சென்னையில்  உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும்  ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரு தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து பல தொழிலதிபர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதில், Adidas  நிறுவனம் சீனாவுக்கு வெளியே தமிழகத்தில் தொழிற்சாலையை அமைக்கவுள்ளது. ஐ-போன் உதிரி பாகங்கள் தயாரிப்பு: ஒசூரில் டாடா நிறுவனம் ரூ.7,000 கோடி முதலீடு செய்துள்ள நிலையில், வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தமிழக அரசுடன் இணைந்து இந்தியாவில் பசுமை போக்குவரத்தை மேம்படுத்த திட்டமிட்டு, தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்  செய்யவுள்ளது.

எனவே,  எலக்ட்ரிக் வாகன  உற்பத்தி நிறுவனமான வின்பாஸ்ட்  நிறுவனம் தென்மாவட்டத்தில் ரூ.16,000 கோடியை முதலீடு செய்துள்ளது.

இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது:

‘’உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான வின்பாஸ்ட் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது.

அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் EVCar மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை VinFast நிறுவனம் அமைக்கவுள்ளது.

இது வெறும் முதலீடு அல்ல; தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல்!

தமிழ்நாட்டில் நடைபெறும் நல்லாட்சி மீதும், நம் மாநிலத்தின் ஆற்றல்மிகு மனிதவளத்தின் மீது நம்பிக்கை கொண்டு இந்தப் பெரும் முதலீட்டை மேற்கொள்ளும்  வின்பாஸ்ட் நிறுவனத்தாருக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எனது மனமார்ந்த நன்றிகள்!

#TNGIM2024-இல் இன்னும் இதுபோன்ற பல வியத்தகு சாதனை அறிவிப்புகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருங்கள்!’’ என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்