வெற்றிடத்திற்கு அறிவியல்பூர்வ விளக்கம் அளித்த மு.க.ஸ்டாலின்

Webdunia
ஞாயிறு, 25 மார்ச் 2018 (21:53 IST)
திமுக மண்டல மாநாடு கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இரவு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவுரையாற்றினார். அப்போது அவர் புதியதாக அரசியலுக்கு வரும் கமல், ரஜினியை மறைமுகமாக தாக்கினார்.

ஒருவர் கட்சி ஆரம்பித்து இந்த பக்கமும் செல்லாமல், அந்த பக்கமும் செல்லாமல் மய்யத்தில் நிற்கின்றார். இன்னொரு வெற்றிடத்தை நிரப்ப வருகிறேன் என்று ஒருசில கற்பனை குதிரையில் பயணம் செய்ய புறப்பட்டுள்ளனர். தமிழக அரசியலில் வெற்றிடம் உண்டாகியிருப்பதை போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஒருசிலர் உருவாக்கி வருகின்றனர். வெற்றிடம் என்பது ஏற்பட்ட அடுத்த கண்மே நிரப்பபபட்டுவிடுகிறது என்பதுதான் அறிவியல். a vacuum is fill as it is created என்ற அறிவியலையும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சில் இருந்து ஜெயலலிதாவுக்கான வெற்றிடமும் நிரப்பப்பட்டுவிட்டதாகவே அவர் கூறியுள்ளார் என்பதும் கூறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பேச்சிலும் மு.க.ஸ்டாலின் நேற்றை போலவே 'பூனை மேல் மதில் போல' என்று பழமொழியை மாற்றி கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்