ஓவியா வெளியேறியது ஒருவிதத்தில் நல்லதே! ஸ்ரீப்ரியா

Webdunia
சனி, 5 ஆகஸ்ட் 2017 (07:05 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேறியது குறித்து சாதாரண நபர்களில் இருந்து திரையுலக பிரபலங்கள் வரை தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



 

 
 
ஒரு டிவி ஷோ இந்த அளவுக்கு அனைவரையும் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்பது ஆச்சரியமான ஒன்று. குறிப்பாக ஓவியாவை யாரும் இந்த ஷோவின் பங்கேற்பாளராக பார்க்கவில்லை. தங்கள் வீட்டின் ஒரு நபராக பார்த்தனர். எனவேதான் அவருக்கு ஒரு பாதிப்பு என்றவுடன் ஒவ்வொரு குடும்பத்தினர்களும் வருத்தம் அடைகின்றனர்.
 
இந்த நிலையில் ஓவியாவின் வெளியேற்றம் குறித்து நடிகை ஸ்ரீப்ரியா கருத்து தெரிவித்தபோது, 'ஓவியாவின் வெளியேற்றம் பெரும் மன வருத்தத்தை தருகிறது. இருப்பினும் அவர் உள்ளே இருப்பதை விட வெளியே இருந்தால் அவரது மனம் அமைதியடையும். உள்ளே அவருக்கு உண்மையாக ஆறுதல் சொல்ல ஒருவரும் இல்லை. வெளியே அவருக்கு கோடிக்கணக்கானோர் உள்ளனர். அவர் விரைவில் இந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட வாழ்த்துக்கள்' என்று தெரிவித்துள்ளார்
அடுத்த கட்டுரையில்