இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை: முதல்வர் உத்தரவு

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (11:06 IST)
இரவில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். 
 
சென்னை புதுப்பேட்டை காவலர் பல்பொருள் அங்காடியில் மின்தூக்கி வசதியை தொடங்கி வைத்த டிஜிபி சைலேந்திரபாபு அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 
 
அப்போது இந்த ஆண்டில் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை விடுமுறை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.
 
மேலும் இரவில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கவும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார் என டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்