சட்டவிரோத மதுவிற்பனையை கண்டுபிடித்த காவலர்கள்... 73 நபர்கள் அதிரடி கைது

புதன், 12 அக்டோபர் 2022 (22:33 IST)
கரூர் மாவட்டம் முழுவதும் மீலாது நபியை முன்னிட்டு சட்டவிரோத மதுவிற்பனையை கண்டுபிடித்த காவலர்கள் 73 நபர்கள் அதிரடி கைது அவர்களிடமிருந்து 722 மதுபாட்டில்கள் பறிமுதல் மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
 
கரூர் மாவட்டம் முழுவதும் மீலாடி நபியை முன்னிட்டு அரசு மதுபான கடைகளில் மதுபானங்கள் விற்பனைக்கு அரசு தடைவிதித்த நிலையில், சட்டவிரோத மதுவிற்பனையை கட்டுப்படுத்த வேண்டி ஆங்காங்கே மாவட்ட அளவில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் ரோந்து போலீஸார் தீவிரமாக ரோந்தில் ஈடுபட்டதின் பேரில் இன்று ஒரு நாளில் மட்டும் 73 நபர்களை கைது செய்து 73 வழக்குகள் பதியப்பட்டு, 15 பெண்கள் உள்பட 73 நபர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்து 722 மதுபாட்டில்களும், மதுவிற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 3 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், கரூர் மாநகரில் உள்ள அரசு டாஸ்மாக் பார்கள் திறந்து உள்ளதும், அதில் தங்கு தடையின்றி மதுக்கள் கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்