தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் தேதி: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (14:52 IST)
தமிழ்நாடு சட்டசபை கூடும் தேதியை சபாநாயகர் அப்பாவு சற்றுமுன் அறிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் இன்று சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாடு சட்டசபை சட்டசபையில் அடுத்த கூட்டத்தொடர் அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கும் என்று அறிவித்துள்ளார். 
 
இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். 
 
மேலும் இந்த கூட்டத்தொடரில் 202 -3 2024 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கை தாக்கல் செய்ய விருப்பதாகவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்