எடப்பாடிக்கு எதிராக திடீரென குரல் கொடுத்த 6 பேர்.. என்ன கோரிக்கை?

Mahendran
செவ்வாய், 9 ஜூலை 2024 (14:21 IST)
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக திடீரென அதிமுகவில் உள்ள ஆறு பேர் குரல் கொடுத்திருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், நத்தம் விசுவநாதன், சிவி சண்முகம், தங்கமணி, வேலுமணி மற்றும் கேபி அன்பழகன் ஆகிய 6 பேர் நேற்று சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து 2 மணி  நேரம் பேசியதாகவும், அப்போதுஅதிமுகவின் தொடர் தோல்வி கட்சிக்கு நல்லதல்ல, இந்த தோல்வி தொடர்ந்தால் கட்சிக்காரர்கள் யாரும் வேலை செய்ய மாட்டார்கள், எனவே உடனடியாக தாமதம் செய்யாமல் பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று குரல் கொடுத்ததாக தெரிகிறது.
 
குறிப்பாக ஓபிஎஸ், சசிகலா, தினகரன் அனைவரையும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என்றும் ஒன்றிணைந்த அதிமுக இருந்தால் மட்டுமே இனிவரும் காலங்களில் வெற்றி பெறும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி இடம் கூறி இருக்கிறார்கள்.
 
டப்பாடி சார்பாக முதலில் இது சரிப்பட்டு வராது என்று சொன்னாலும் அதன் பிறகு யோசிப்போம் என்று கூறியதாக கூறப்படுவதை அடுத்து விரைவில் அதிமுக ஒன்று சேரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதிமுக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்