நான் பக்கா தமிழன்; காவிரி அரசியலை உடைக்கவே வந்துள்ளேன்: சிம்பு!

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2018 (12:54 IST)
நடிகர் சிம்பு கன்னட மக்கள் தமிழா்களுக்கு 11 ஆம் தேதி ஒரு டம்ளா் தண்ணீா் கொடுக்க வேண்டும். அதனை புகைப்படமாகவோ, வீடியோவாகவே இணையத்தில் பதிவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
 
சிம்புவின் வேண்டுகோளை ஏற்று கன்னட மக்கள் பலர் தமிழர்களுக்கு தன்ணீர் வழங்கி அதனை புகைப்படமாகவும், வீடியோவாகவும் சமூக வலைதலங்களில் பதிவிட்டு வருகின்றனர். 
 
இது குறித்து சிம்பு கன்னட பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, கன்னடர்கள் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுப்பது போன்ற வீடியோ, போட்டோகளை பார்த்து தமிழர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் உள்ளனர். 
மனிதன் என்ற அடிப்படையில் நான் மக்களுக்கு நல்லது செய்ய விரும்புகிறேன். எனது கருத்துக்களால் எனக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் மக்கள் அனைவரும் எனக்காக நிற்பார்கள். 
 
மக்களின் மனநிலையை மாற்றுவது சுலபம் அல்ல. ஆனால், கன்னடர்கள் தமிழர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டனர். நான் கன்னடன் அல்ல, பக்கா தமிழன். நான் கன்னடர்களை ஆதரிக்கவில்லை. மனிதாபிமானத்தை மட்டுமே ஆதரிக்கின்றேன்.
 
இவ்வாரு பேசுவதால் நான் அரசியலில் நுழையப்போகிறேன் என்று ஏதுமில்லை. காவிரி விவகாரத்தில் உள்ள அரசியலை உடைக்கவே நான் வந்துள்ளேன். நல்லது நடக்க வேண்டும் என்றால் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதுதான் தற்போது நடந்துள்ளது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்