அதிமுக எம்பிக்களை வைத்து தன்னை தற்காத்துகொள்கிறது பாஜக: சந்திரபாபு நாயுடு சாடல்!

வியாழன், 12 ஏப்ரல் 2018 (12:17 IST)
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரமதர் நரேந்திர மோடியை சமீபகலாமாக நேரடியாக தாக்கி பேசி வருகிறார். ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத காரணத்தால், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டார். 
 
இந்நிலையில், இன்று மோடி தமிழகத்திற்கு வந்துள்ளார். மோடி வருவதை எதிர்த்து கருப்பு கொடி, கருப்பு பலூன் பறக்கவிடப்பட்டது. மேலும், #GoBackModi என்ற ஹேஷ்டேக்கும் டிவிட்டரில் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 
 
மேலும், பாஜக சார்பில் இன்று உண்ணாவிரதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற நேரத்தை வீணடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த உண்ணாவிரதம் கடைபிடிக்கப்படுகிறது. 
 
இது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பின்வருமாறு பேசியுள்ளார். மக்களவை முடங்கியதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடிதான். ஆனால், இதனை திசை திருப்பவே பிரதமர் உட்பட பாஜகவினர் உண்ணாவிரத நாடகம் நடத்துகின்றனர். 
ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து, நிதியுதவி அளிக்கப்படும் என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், அதை நிறைவேற்றவில்லை. 
 
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியதற்கு யார் காரணம்?  நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள பயந்த பாஜகதான் காரணம். மத்திய அரசு மனது வைத்தால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியும். ஆனால், காவிரி விவகாரம் தொடர்பாக அதிமுக எம்பிக்களை அமளியில் ஈடுபட வைத்து தன்னை தற்காத்து கொண்டு வருகிறது பாஜக என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்