சிம்புவுக்கு இருக்கும் முதிர்ச்சி ரஜினி, கமலுக்கு இல்லையே: சொன்னவர் யார் தெரியுமா?
புதன், 11 ஏப்ரல் 2018 (18:10 IST)
சிம்புவுக்கு இருக்கும் முதிர்ச்சி சமீபத்தில் அரசியலில் குதித்துள்ள ரஜினி, கமலுக்கு இல்லையே என்பதை நினைத்து அதிர்ச்சி அடைந்தேன் என்று கன்னட நடிகர் அனந்தநாக் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
புதியதாக அரசியலுக்கு வந்துள்ள கமல், ரஜினியிடம் காவிரி பிரச்சனையில் வித்தியாசமான அணுகுமுறையை எதிர்பார்த்தேன். ஆனால் அவர்களும் பழைய பாணியில், ஏற்கனவே உள்ள அரசியல் தலைவர்கள் போல் அரசியல் செய்கின்றனர்.
கர்நாடகத்தில் தற்போது தேர்தல் நடைபெறுகிறது இன்னும் ஒரு மாதத்தில் புதிய அரசு அமைந்தவுடன் இந்த பிரச்சனைக்கு முடிவு கிடைத்துவிடும். மத்திய அரசும் தற்போது நெருக்கடியில் உள்ளதால் உடனடியாக இந்த விஷயத்தில் முடிவெடுக்க முடியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் இப்போதைக்கு தேர்தல் வர வாய்ப்பு இல்லை. பின் ஏன் அவர்கள் இவ்வளவு ஆக்ரோஷமாக போராட வேண்டும்,
காவிரி விஷயத்தில் சிம்புவின் பார்வை வித்தியாசமாக இருந்ததை பார்த்து ஆச்சரியப்படுகிறேன். அவருக்கு இருக்கும் முதிர்ச்சி கமல், ரஜினியிடம் இல்லாதது அதிருப்தி அளிக்கின்றது. காவிரி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர இருமாநில அரசியல்வாதிகளும் விரும்பவில்லை. ஏனெனில் இந்த பிரச்சனை தான் அவர்களுக்கு தற்போது உதவி வருகிறது.
நான் தமிழர்களுக்கு எதிரானவன் அல்ல. தமிழர்கள் மிகவும் நல்லவர்கள், மென்மையானவர்கள். கன்னடர்களுடன் நெருக்கமாக பழகும் தன்மை உடையவர்கள். அதேபோல் கன்னடர்களும் மென்மையானவர்கள். இதனால் அவர்கள் பலவீனமானவர்கள் என்று எண்ண வேண்டாம். நம்மை சீண்டினால் அவர்கள் பாணியில் பதிலடி கொடுப்போம். அப்போது அவர்கள் நம்மை புரிந்து கொள்வார்கள்
கூட்டாட்சி நாட்டில் இரு மாநிலங்களுக்கு இடையே ஒத்துழைப்பு என்பது மிகவும் அவசியம். இதனை தமிழர்களுக்கு நாம் சொல்லி கொடுக்க வேண்டும். இவ்வாறு நடிகர் அனந்த் நாக் கூறியுள்ளார்.