நடிகர் சித்தார்த் சர்ச்சைக்குரிய டுவிட்: காயத்ரி ரகுராம் கண்டனம்!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (15:54 IST)
பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவல் பதிவு செய்த டுவிட் ஒன்றுக்கு சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட்டை பதிவு செய்த நடிகர் சித்தார்த்திற்கு நடிகையும் பாஜக பிரபலமான காயத்ரி ரகுராம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்
 
பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி சமீபத்தில் பஞ்சாப் சென்றது குறித்தும் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது குறித்தும் டுவிட் பதிவு செய்தார். இந்த ட்விட்டிற்கு சித்தார்த் பதிவு செய்த கமெண்ட்டுக்கு நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்து கூறியிருப்பதாவது:
 
இது போன்ற கேவலமான ட்வீட்கள் குறிப்பாக ஒரு நடிகரிடமிருந்து வருவதைக் கண்டு வருத்தமாக இருக்கிறது. அவரது வரவிருக்கும் திரைப்பட விளம்பரத்திற்காக வெறும் 5 நிமிட புகழ்காக. பிரதமரின் பாதுகாப்பு, தேசிய ஜாம்பவான்களை கேலி செய்யும் பிரபல நடிகர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று வெட்கப்படுகிறேன்.
 
முதல்வர் ஸ்டாலின் இந்த ட்வீட்டுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். பிரதமரின் பாதுகாப்பு என்பது நகைச்சுவை அல்ல. இதை நடிகர் சங்கமும் கண்டிக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தேசிய பிராண்டுகள் கூட இதை கண்டிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களை அனுமதிக்க முடியாது அல்லது அப்படிப்பட்டவர்களை திமுக பாதுகாத்து ஊக்கப்படுத்துகிறது என்றால் இதை திமுக நோக்கமாகவும் பார்க்கிறேன்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்