70 காவலர்களுக்கு கொரொனா தொற்று உறுதி !

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (15:44 IST)
இந்தியாவில் மூன்றாவது அலை கொரொனா வேகமாகப் பரவி வருகிறது.  இதைத் தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைள் எடுத்து வருகிறது.  

சமீபத்தில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கொரொனா கட்டுப்பாடுகள் விதிகப்பட்டன.

இந்நிலையில், சென்னையில் சுமார் 70 காவலர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டுத் தனிமையில் இருக்குமாறும், தேவைப்படுவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்  உடனடியாக தகவல்கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்