அமைச்ச சேகர் பாபுவுக்கு காது கேட்கலை....செவிட்டு மிஷின் வாங்கி தரப்படும்- பாஜக நிர்வாகி டுவீட்

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (16:03 IST)
இந்து சமய அற ந நிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் ஆன்மிக அணுமுறை திராவிட மாடல் பற்றி பரவலாகப் பேசப்படும் நிலையில், ஆ ராசாவின் சர்ச்சை பேச்சு பற்றி விளக்கம் அளிக்க அவர் மறுத்துள்ளார்.

மனு நீதி என்று பரவலாக அறியப்படும் மனுஸ்மிருதி, இந்து மதம் போன்றவை தமிழ்நாட்டில் அவ்வப்போது விவாதப் பொருள் ஆவது வழக்கம். தற்போது, முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம். பியுமான ஆ. ராசா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், இந்து மதம் குறித்து பேசிய காணொளி சமூக ஊடகத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

ஆ.ராசாவின் பேச்சு சர்ச்சையாகியுள்ள  நிலையில், இதுபற்றி எம்பி தயா நிதிமாறன் மற்றும் இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அமைச்சர் சேகர் பாபு, பதில்  ஒன்றும் தெரிவிக்கவில்லை. இந்த  நிலையில், இதுகுறித்து,  பாஜக பிரமுகர் திருச்சி சூர்ய சிவா தன் டுவிட்டர் பக்கத்தில், திமுக ஆன்மீக அரசியல் செய்யுது என்று பேசின சேகர் பாபுவுக்கு காது கேட்கலை , அவருக்கு உதவும் வகையில் தமிழக பாஜக  சார்பாக செவிட்டு மிஷின் வாங்கி தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் #செவிட்டுபாபு
@PKSekarbabu எனப் பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்