அமலாக்கத்துறை அதிகாரிகளால் நேற்று நள்ளிரவு திடீரென அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூரிலிருந்து இன்று சென்னை வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி அவரை பார்த்த பிறகு அங்கிருந்து நேராக நீதிமன்றம் சென்று ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
தனது கணவர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டிருப்பதாக அவர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு நியமனம் செய்யப்பட்ட நிலையில் அதில் உள்ள ஒரு நீதிபதி திடீரென அந்த வழக்கில் இருந்து விலகியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இதனை அடுத்து வேறு அமர்வு நியமனம் செய்யப்பட்டு இன்றே விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.