அமைச்சர் செந்தில் பாலாஜி தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்ய வேண்டும்: ஈபிஎஸ்

புதன், 14 ஜூன் 2023 (12:42 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி தார்மீக அடிப்படையில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 
 
அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை செய்த நிலையில் நள்ளிரவில் அவரை கைது செய்தனர். 
 
இந்த நிலையில் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியபோது ’அமைச்சர் செந்தில் பாலாஜி தார்மீக அடிப்படையில் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். 
 
மேலும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார் என்றும், மனித உரிமை குறித்து பேசுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்