இன்று ஜாமீன் மனு விசாரணை.. நேற்று ஐசியூவில் அனுமதி.. செந்தில் பாலாஜியால் பரபரப்பு..!

Siva
திங்கள், 22 ஜூலை 2024 (08:35 IST)
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் நேற்று அவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி ஒரு ஆண்டுக்கு மேலாக சிறையில் உள்ளார் என்பதும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் இன்று அவருக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது தெரியவரும். இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு திடீரென நேற்று சிறையில் நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. செந்தில் பாலாஜியின் உடல் நிலையை காரணம் காட்டி இன்று அவருக்கு ஜாமீன் கிடைக்க அவரது தரப்பில் வாதிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்