சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு: செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவில் முக்கிய உத்தரவு..!

Mahendran

வியாழன், 18 ஜூலை 2024 (17:52 IST)
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 
 
மேலும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்காக வழக்கு விசாரணை ஜூலை 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்ததோடு, அன்றைய தினம் செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்தவும் உத்தரவு பிறப்பித்தார்.
 
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் பல ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்த நிலையில் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
 
இந்த நிலையில் தற்போது சட்டவிரோத பணம் பரிமாற்ற தடைச் சட்டத்தில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து ஜூலை 22 ஆம் தேதி செந்தில் பாலாஜி நேரில் ஆஜர் படுத்த உத்தரவு பிறப்பித்தார்.
 
இதனால் செந்தில் பாலாஜியின் அனைத்து முயற்சிகளும் நான் தோல்வி அடைந்த நிலையில் அடுத்த கட்டமாக அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்