டெல்லியில் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு: மன நிம்மதிக்காக போவதாக சொன்னாரே?

Siva

செவ்வாய், 9 செப்டம்பர் 2025 (08:30 IST)
அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
'மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன்' என கூறி சென்ற செங்கோட்டையன், திடீரென டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
 
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என 10 நாட்கள் காலக்கெடு விதித்து, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தார் செங்கோட்டையன். இதன் காரணமாக, கட்சி பொறுப்புகளில் இருந்து அவர் நீக்கப்பட்டிருந்தார். இந்த சூழலில், அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த சந்திப்பு, அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல்கள், சவால்கள் மற்றும் பிளவுபட்ட நிலையை மேலும் உறுதிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த சந்திப்பின் நோக்கம் குறித்தும், இதன் பின்னணியில் உள்ள அரசியல் நகர்வுகள் குறித்தும் பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன.
 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்