அதிமுக ஒருங்கிணைப்பை முன்மொழிந்த செங்கோட்டையன் அதிமுக பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஓபிஎஸ் அணியினர் அளித்துள்ள வரவேற்பு வைரலாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே முரண்பாடுகள் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றும், இதற்கு 10 நாட்கள் அவகாசம் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தார்.
அவரது இந்த அறிவிப்பை அதிமுக தொஉமீகு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றிருந்த நிலையில், செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தன்னை கட்சியை விட்டு நீக்கினாலும், உண்மை விசுவாசியாக அதிமுகவை இணைப்பேன் என செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இந்நிலையில் கோவை சென்ற செங்கோட்டையனுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோலாகலமாக வரவேற்பு அளித்துள்ளனர். அவருக்கு பரிவட்டம் கட்டி அவர்கள் வரவேற்ற புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. செங்கோட்டையனின் இந்த அறிவிப்பை தொடர்ந்து டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் அதிமுகவுடன் மீண்டும் இணைய விருப்பம் தெரிவிக்கும் வகையில் பேசி வருவது அதிமுகவிற்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K