ஏசி வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி: ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பிய சிறுவன்..!

Siva

திங்கள், 8 செப்டம்பர் 2025 (17:37 IST)
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏ.சி. கம்ப்ரசர் வெடித்ததில், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 
 
உயிரிழந்தவர்கள் சச்சின் கபூர், அவரது மனைவி ரிங்கு கபூர் மற்றும் அவர்களது மகள் சுஜன் கபூர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விபத்து அதிகாலை 1:30 மணியளவில், நான்கு மாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் ஏற்பட்டது.
 
வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட அடர்த்தியான புகை, இரண்டாம் தளத்தில் உறங்கி கொண்டிருந்த கபூர் குடும்பத்தினரை மூச்சு திணறடித்தது. 
 
சச்சின் கபூர், அவரது மனைவி மற்றும் மகள் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தனர். அதே அறையில் உறங்கி கொண்டிருந்த அவர்களது மகன், ஜன்னல் வழியாக குதித்து தன்னை காப்பாற்றிக் கொண்டார். அவர் தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்