சர்ச்சையில் இருந்து தப்பிக்க கமலுக்கு செல்லூர் ராஜூ ஃப்ரீ அட்வைஸ்!

Webdunia
புதன், 15 மே 2019 (11:23 IST)
அரசியலில் மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதித்து விட்ட கமல் அவரின் கட்சியை கலைத்து விட்டு செல்லலாம் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 
சமீபத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் செய்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று பேசியது அரசியல்தளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
அவர் பேசியது கண்டனத்துக்குறியது என்று பாஜக தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா மற்றும் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் கருத்து தெரிவித்தனர். அந்த வகையில் தற்போது செல்லூர் ராஜூ கமல் குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, கமல் சினிமாவில் பட்டம் பெற்று இருக்கலாம். சினிமா துறையிலும் கலைத்துறையிலும் பல்வேறு விருதுகளை பெற்று இருக்கலாம். ஆனால் அரசியல் என்பது வேறு. கமலுக்கு அரசியலின் அரிச்சுவடியே தெரியாது. அவருக்கு அரசியல் ஒத்து வராது. 
 
தமிழகத்தில் கமல் அரசியலுக்கு வந்ததிலிருந்து அவர் பேசியது யாருக்கும் எதுவும் புரியவில்லை. இப்போது இந்துக்கள் குறித்து அவர் பேசிய கருத்தால் அரசியலில் மிகப் பெரிய எதிர்ப்பை சம்பாதித்து விட்டார். ஆகவே கமல் அவரின் கட்சியை கலைத்து விட்டு, மீண்டும் கலைத்துறையில் ஈடுபட வேண்டும் என்பதே எனது எண்ணம் என பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்