சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர்தான் நாதுராம் கோட்சே என்றும் கமல் பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அவரது பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருப்பதோடு, டெல்லி கோர்ட்டில் கிரிமினல் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கமலுக்கு எச்.ராஜா, தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, பிரேமலதா, நடிகர் விவேக் ஓபராய், நடிகை கஸ்தூரி உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, வைகோ உள்பட ஒருசில தலைவர்கள் கமல்ஹாசனின் கருத்தை ஆதரித்தும் உள்ளனர். ரஜினிகாந்த் இதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று கூறிவிட்டார்.
இந்த நிலையில் இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியபோது, 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல் பேசியது தவறு என்றும், திரைப்படத்தில் வசனம் பேசுவதைப் போல கமல் பேசிவிட்டார் என்றும், எந்த மதத்தையும் யாரும் புண்படுத்தக்கூடாது என்றும் கூறினார். அவர் இந்த கருத்தை அரவக்குறிச்சி அமமுக வேட்பாளர் சாகுல் ஹமீது முன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது