மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, ஒரு அமைச்சர் வீடுகள் தோறும் டிபன் பாக்ஸ் கொடுத்து வருவதாகவும், இது ஒரு அமைச்சரின் வேலையா என்று மக்கள் கேவலமாக பேசுவதாகவும் அவர் கூறினார்.
மதுரை மாநகராட்சியில் நடந்த சொத்து வரி முறைகேடுகளுக்கு, இரண்டு திமுக அமைச்சர்களுமே காரணம் என்று செல்லூர் ராஜு குற்றம்சாட்டினார். அவர்கள் மாநகராட்சியை முறையாகக்கண்காணிக்க தவறியதே இந்த முறைகேடுகள் நடைபெறக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.