நானுமே ஸ்டாலின் சாரை அங்கிள்னு கூப்பிடுவேன்.. விஜய் தப்பா பேசலை..! - கே.எஸ்.ரவிக்குமார்!

Prasanth K

வியாழன், 28 ஆகஸ்ட் 2025 (12:40 IST)

தவெக மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலினை ‘அங்கிள்’ என விஜய் குறிப்பிட்டு பேசியது குறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

 

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு மதுரையில் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய தவெக தலைவர் விஜய், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ‘அங்கிள்’ என குறிப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விஜய் மேடை நாகரீகம் இல்லாமல் பேசுவதாக திமுகவினர் மட்டுமல்லாமல் பாஜகவினருமே கூட அவரது பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்தனர்.

 

இந்நிலையில் விஜய்யின் சர்ச்சை பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் “விஜய் குறை சொல்லும் நோக்கில் அங்கிள் என சொன்னதாக எனக்கு தோன்றவில்லை. நேரில் பார்த்தால் கூட ‘நல்லா இருக்கீங்களா அங்கிள்?’ என்றுதான் கேட்பார் விஜய். அதையே மாநாட்டிலும் கமர்ஷியல் செய்து பேசியுள்ளார். ஆனால் அதை சிலர் வேறுமாதிரி எடுத்துக் கொண்டு பேசுகின்றனர். நாட்டுக்கு என்ன தேவையோ அதை மட்டும் பாருங்கள்.

 

நானுமே கூட ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு படம் செய்த காலத்தில் அப்போதைய துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் சாரை அவரது வீட்டில் சந்திக்கும்போது அங்கிள் என்றும், அவரது மனைவியை ஆண்டி என்றும் அழைத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்