அமைச்சர் செல்லூர் ராஜு தனது சமீபத்திய பேட்டியில் பாஜக தலைவரின் வேல் யாத்திரை குறித்தும் பிரேமலதா விமர்சனம் குறித்தும் பதில் அளித்துள்ளார்.
மதுரை தங்கராஜ் சாலையில் 1986 ஆம் ஆண்டு முதல் செயல்படும் அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம் 5 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இக்கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் ஆட்சியர் அன்பழகன், ஆணையர் விசாகன் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு பின்வருமாறு பேசினார்,
கொரோனா தொற்று காலகட்டத்தில் பாஜக நடத்தும் வேல் யாத்திரையை தவிர்த்து இருக்கலாம். அரசியல் காரணம் மற்றும் தேர்தல் நெருங்குவதால் பாஜக தலைவர் முருகன் வேல் யாத்திரை நடத்துகிறார்.
மேலும், பிரேமலதா விஜயகாந்த் எங்கள் ஊர் மருமகள் அவரிடம் தவறான செய்தியை கூறியதால் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிந்து விட்டது என்று நினைத்துக் கொண்டு சாலைகள் சரியில்லை என்று புகார் கூறியுள்ளார். விஜயகாந்த் ஓடியாடி விளையாடிய இடங்கள் அனைத்தும் தற்போது ஸ்மார்ட் சிட்டி மூலம் நகர் வளமாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.