300 கிலோ கஞ்சா கண்டெய்னர் பிடிப்பட்டது: மதுரையில் பரபரப்பு!

புதன், 11 நவம்பர் 2020 (12:00 IST)
மதுரையில் 300 கிலோ கஞ்சாவுடன் கண்டெய்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது. 
 
மதுரை மாநகருக்கு கண்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியை மதுரை மாநகர் சுப்ரமணியபுரம் காவல் நிலையம் எல்லைக்கு அருகே தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து நடத்திய சோதனையில் கஞ்சா முட்டை முட்டையாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 
 
இதையடுத்து தனிப்படையினர் போலீசார் நடத்திய விசாரணையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கட்ட தேவன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த ராமு அவருடைய மகன் மலைச்சாமி என்பவர் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை கடத்தி வந்தது இவற்றின் உசிலம்பட்டி கொண்டு சென்று சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து மதுரை மாநகரில் விற்பனை செய்தது தெரியவந்தது. 
 
அவரை கைது செய்து போலீசார் லாரியிலிருந்து 300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கஞ்சா  கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து பார்வையிட்ட மதுரை சட்ட ஒழுங்கு துணை ஆணையாளர் சிவ பிரசாத் பின்னர் செய்தியாளர் கூறும்போது,
 
கஞ்சா உடையுடன் லாரி ஒன்று சுற்றிவருவது ரகசியத் தகவல் கிடைத்தது தொடர்ந்து வாகன சோதனை நடத்திய போது 300கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தி வந்த மலைச்சாமி என்பவர் கைது செய்யப்பட்டு தொடர்புடைய பலர் பிடிக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். மேலும் 600 கிலோ கஞ்சா வரை ஒரு மாதத்தில் மதுரை மாநகரில் காவல்துறை பதிவு செய்தனர் இவ்வாறு அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்