மாரத்தான் விழாவில், மதுரைப் புகழ் – செல்லூர் ராஜு கலகல…

Webdunia
ஞாயிறு, 6 ஜனவரி 2019 (15:23 IST)
அதிமுக அமைச்சர் மாரத்தான் போட்டி ஒன்றின் பரிசு வழங்கும் விழாவில் கலந்துகொண்டு மதுரையின் புகழைப் பற்றிப் பேசினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக அமைச்சர்கள் கூண்டில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பறவைகள் போல சுதந்திரமாக இருந்து வருகின்றனர். அமைச்சர்கள் தங்கள் செயல்கள் மற்றும் பேடிகளின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். அவர்களைப் பற்றிய செய்திகளும் அதிகளவில் ஊடகங்களில் இடம்பெறுகின்றன. அதிலும் ஜெயக்குமார், செல்லூர் ராஜு போன்றவர்களுக்கு ரசிகர் மன்றங்கள் அமைக்கும் அளவிற்கு அவர்களின் புகழ் பரவி வருகிறது.

வைகை ஆற்றின் நீர் ஆவியாகாமல் தடுப்பதற்கு தெர்மாக்கோல் போடும் திட்டத்தை அறிமுகப்படுத்தியததை அடுத்து நெட்டிசன்களின் செல்லப்பிள்ளையானார் செல்லூர் ராஜு. அன்று முதல் தெர்மாக்கோல் ராஜூ, விஞ்ஞானி செல்லூர் ராஜு எனப் பலச் செல்லப்பெயர்களில் அழைக்கப்பட்டு வருகிறார். அதனால் அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் ஊடகங்கள் செய்தி சேகரிக்க அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.

சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியின் பரிசுகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட செல்லூர் ராஜு, பரிசுகளை வழங்கியப் பின் ’ தோல்வியைக் கண்டு மாணவர்கள் பயப்படாமல் ஓடினால் வாழ்க்கையில் சாதிக்கலாம். மாரத்தான் போட்டியில் சிறுவர் - சிறுமிகள் பங்கேற்பதன் மூலம் நட்பு, அன்பு, பாசம், உற்சாகம் மேம்படும்.’ என்றார்.

மேலும் மதுரைப் பற்றியக் கேள்விக்கு ‘மதுரை நகரம் மற்ற நகரங்களை விட தொன்மம் மிக்க நகரமாக விளங்குகிறது. ஆனால் சினிமாவிலோ மதுரை என்றாலே கஞ்சா கசக்குவது, அரிவாள் , வெட்டு, கொலை என்று காமிக்கின்றனர். ஆனால் உண்மையில் மதுரைக் காரர்கள் அன்பானவர்கள். பாசத்திற்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்