தாறுமாறாக ஓடிய காரால் பயங்கர விபத்து.. சென்னை வேளச்சேரி அருகே பதற்றம்..!

Siva

செவ்வாய், 17 டிசம்பர் 2024 (16:49 IST)
சென்னை வேளச்சேரி அருகே, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதில், ஒரு சிலர் காயம் அடைந்ததாக வெளிவந்துள்ள செய்தி, அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில், பிரகதீஷ் என்பவர் ஓட்டி வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, வாகனங்கள் மற்றும் பிளாட்பாரத்தில் கடை வைத்திருந்தவர்கள் மீது மோதியது.

இதில் காரை ஓட்டி வந்த பிரகதீஷ்க்கு எந்த காயமும் இல்லை என்றாலும், இந்த விபத்தில் சிக்கி சிலர் காயம் அடைந்துள்ளதாகவும், அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இது குறித்து கிண்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி, அதி வேகமாக காரை ஓட்டி வந்ததற்கே விபத்துக்கு காரணம் என்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பிரகதீஷ் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

அவர் குடிபோதையில் இருந்தாரா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணைக்கு பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.



Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்